Wednesday, 28 September 2011

எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிக்க ரஜினி சொல்லும் மந்திரம்..!


எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிக்க ரஜினி சொல்லும் மந்திரம்..!



வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. கிடைச்ச வெற்றியை , தொடர்ந்து தக்க வைக்க தெரிஞ்சு இருக்கணும். அதுக்கு குறுக்கு வழி வேலைக்கு ஆகாது. திறமை , நேர்மை ரெண்டும் வேணும். 



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS9lfLIM4yh8hV0IdYkgK5trAc-dNxmaBWAOpHxYraKUMqZAeb5




ரஜினிகாந்த் நமது சம கால சரித்திரம். அந்த மாமனிதரின்  , இத்தகைய இமாலய வெற்றிக்கு, என்ன காரணம் என்பதை , நம் ஒவ்வொருவரும் தனித்தனியாக யோசனை செய்து பாருங்கள். அந்த பண்புகளை , முடிந்தவரையில் கடை பிடிக்க பாருங்கள் ! ஒரு சாதாரண மனிதரா இருந்தவருக்கு, வானத்தில இருந்து எந்த தேவதையும் ஆசீர்வாதம் கொடுத்திட்டு , ஒரே நாள்ல அவர் பெரிய ஆளா ஆகிடலை. 
இலக்கு, உழைப்பு, பணிவு , சக மனிதனை மதிக்க தெரிஞ்ச குணம் - இது எல்லாத்துக்கும் மேல , ஆண்டவனை பரிபூரணமா நம்பி , அவன் கிட்ட எல்லாத்தையுமே ஒப்படைச்சது...  இப்படி...நெறைய..


எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச விஷயம்.. " நல்லவன் மாதிரி நடிக்கிறது இல்லை, முடிஞ்ச அளவுக்கு நல்லவனா வாழ்ந்து காட்டும் குணம்."! இன்னைக்கு தமிழ் பேச தெரிஞ்ச , உலகத்தில் உள்ள அத்தனை உள்ளங்களும் நேசிக்கும் - ஒரு மகா மனிதன் , நிஜமாகவே காந்தம்..!



சமீபத்துல நான் படிச்ச கட்டுரை ஒன்னு, நம்ம வாசகர்களுக்கு பயன்படுமே என்று கருதி , உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...


ரஜினிகாந்த் சொல்லும் அந்த மெசேஜ் , நம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று...! தொடர்ந்து படியுங்கள்..!



பாபா குகைக்கு ரஜினி வழியில் மேற்கொண்ட பயணம் குறித்த தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதியை ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ளது.
படப்பையில் பாபா ஆசிரமம் உருவான பின்னணி குறித்தும், அந்த ஆசிரமத்துக்கு ரஜினி முதன் முதலாக வந்த போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் இந்த இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் ரஜினியின் நண்பர் ஹரி.
முன்பு ஒரு திரைப்பட வெற்றி விழாவில் ரஜினி சொன்ன காது கேட்காத தவளை கதையை முதன் முதலாக இந்த ஆசிரமத்தில் வைத்துதான் ஹரிக்கு சொன்னாராம் ரஜினி. 
எடுத்த காரியம் முடிக்க விருப்பமிருப்பவர்கள், எந்த விமர்சனங்கள், தடைகள் குறித்தும் கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ரஜினியின் மந்திரத்தை இந்தக் கட்டுரையில் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். 
கட்டுரையின் இறுதிப் பகுதி: 

டப்பையில் பாபாவின் ஆசிரமம் கட்ட முடிவெடுத்து, அது கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் அதைப் பார்ப்ப தற்கு ரஜினி போனாராம். அப்போது நடந்த சுவாரஸ்யத்தை ஹரி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

”ஆசிரமம் அமைந்திருந்த இடத்துக்கு பொதுவா எல்லோரும் போக்கூடிய பாதையில் ரஜினி போகலை. தாம்பரத்துலயிருந்து முடிச்சூர் நோக்கி ரஜினியோட கார் முதலில் போனது. முடிச்சூருக்கு முன்னால் காரை மணிமங்கலம் நோக்கி திருப்பச் சொன்னார் ரஜினி. அந்த ரோட்ல கார் திரும்புனவுடன் கொஞ்ச தூரத்துல தெரிஞ்ச மலையைப் பார்த்தார். ‘ஹரி, அந்த மலைக்குப் பக்கத்துலதானே ஆசிரமம் இருக்கு?’ன்னு பளிச்சுனு கேட்டார்.

இவருக்கு மிகச் சரியா இந்த இடம் எப்படித் தெரிஞ்சுதுனு நான் ஆடிப்போயிட்டேன். கார் இன்னும் கொஞ்ச தூரம் போனது. ‘ஹரி, பார்த்தியா அப்படியே துரோணகிரி மாதிரியே இருக்கு. என் மனசுல பட்டது அப்படியே இருக்கே’ன்னு கண்ணை மூடிக்கிட்டார். அப்பத் தான் புரிஞ்சது… அவருக்கு ஏதோவொரு ரூபத்துல படப்பை ஆசிரமம் கட்டப்பட்டிருக்கும் இடம் தெரிஞ்சிருக்கு. அதைத் தான் நேர்ல பார்த்த மாதிரி இமயமலையில என்கிட்ட சொல்லியிருக்கார்!” என்கிறார் ஹரி.

அன்றைக்கு மரம் நடுதல், ஆழ்ந்த தியானம் என்று படுஉற்சாகமாக இருந்த ரஜினி… தனக்காக ஹரி வாங்கி வைத்திருந்த சாம்பார் சாதத்தையும் தயிர் சாதத்தையும் வயிறு நிறைய சாப்பிட்டாராம். ‘மனசு ரொம்ப நிறைவா இருக்கு ஹரி… ஒரு குட்டித் தூக்கம் போடவா?’ என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த புல்வெளியில் அசந்து தூங்கியிருக்கிறார். அன்று மாலை வீடு திரும்பும்போது வழியில் ஹரியிடம் அவர் பகிர்ந்துகொண்ட குட்டிக் கதை என்னவாம் தெரியுமா?

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது. அதே குரல், ஆனா தவளைகண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் அதிகமாக , அதிகமாக - ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது. 

இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம் பித்தது.
அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது. நாமளும் அப்படித்தான் இருக்கணும்..பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும்’ என்றாராம்! 

என்ன... OK வா...?

No comments:

Post a Comment